தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாகையில் வருகிற 21-ந்தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது என்று மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2023-07-16 18:45 GMT


நாகையில் வருகிற 21-ந்தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது என்று மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேலைவாய்ப்பு முகாம்

வேலைவாய்ப்பு-பயிற்சித்துறை, வேலைவாய்ப்பு பிரிவு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், நாகப்பட்டினத்தில் ஒவ்வொரு மாதமும் 2-ம் வெள்ளிக்கிழமை, 3-ம் வெள்ளிக்கிழமைகளில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் மாதம் ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் இந்த மாதம் வருகிற 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. முகாமில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

அனைத்து கல்விச்சான்றிதழ்கள்

முகாமில் 25-க்கும் மேற்பட்ட தனியார் துறை வேலைவாய்ப்பு நிறுவனங்கள் பங்குபெற்று வேலைநாடுபவர்களை தேர்வு செய்ய உள்ளனர். எனவே இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள வேலை தேடுபவர்கள் தங்களுடைய அனைத்து கல்விச்சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை ஆகிய அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்