தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
தஞ்சை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது;
தஞ்சாவூர்;
தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் மாதத்தில் 2-வது மற்றும் 4-வது வெள்ளிக்கிழமையில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. இதில் தஞ்சையை சேர்ந்த 7 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான ஊழியர்களை தேர்வு செய்தது.முகாமில் 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த 75-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பெண்கள் தங்களது கல்வித் தகுதிக்கு ஏற்றவாறு நிறுவனங்களைத் தேர்வு செய்தனர். முகாமின் மூலம் 25 பேருக்கு வேலைக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் குழந்தைவேல் தலைமையில் அலுவலர்கள் செய்திருந்தனர்.