வேன் மோதி தனியார் தொழிற்சாலை காவலாளி சாவு
ராணிப்பேட்டை அருகே வேன் மோதி தனியார் தொழிற்சாலை காவலாளி இறந்தார்.;
ராணிப்பேட்டையை அடுத்த பழைய அக்ராவரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 55). தனியார் தொழிற்சாலையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று அக்ராவரம் - பெல் பை பாஸ் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த வேன் ஒன்று, நடந்து சென்ற ராஜேந்திரன் மீது மோதியது.
இதில் ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதே சாலையில் தான் நேற்று காலை கார் ஒன்று விபத்துக்குள்ளாகி 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.