தனியார் வேலைவாய்ப்பு முகாம்
திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை மறுநாள் நடக்கிறது.
திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில் தனியார் நிறுவனங்களுக்கு திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த படித்த தகுதியான இளைஞர்கள், இளம்பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் மத்திய, மாநில அரசுகளின் திறன் மேம்பாட்டு கழகத்தின் இலவச திறன் பயிற்சிக்கு பதிவு செய்யப்படுகிறது.
எனவே படித்து வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் அனைத்து கல்வி சான்றிதழ்களின் நகல்களுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இந்த முகாமில் வேலைவாய்ப்பு பெறும் நபர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு தொடர்வதோடு, அரசு துறைகளின் பணிகளுக்கு விதிகளின்படி பரிந்துரை செய்யப்படும் என்று கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.