தனியார் நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை
தனியார் நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்
ஆலங்குளம்:
தூத்துக்குடி மாவட்டம் கங்கைகொண்டான் துறையூரை சேர்ந்தவர் செல்வின் மகன் சார்லஸ் (வயது 37). இவர் பிரபல தனியார் கண் அறக்கட்டளை நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். கண் விழிப்புணர்வு மற்றும் சிகிச்சை சம்பந்தமாக முகாம் நடத்தி வந்தார்.
இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி ஊத்துமலையில் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாம் முடிந்த பின்னர் பக்கத்து ஊரான ரெட்டியார்பட்டிக்கு சென்ற அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அப்போது பார்த்தபோது அவர் விஷம் குடித்தது தெரியவந்தது. உடனே அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நேற்று முன்தினம் காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.