பாரதீய ஜனதா கட்சி சார்பில் பிரதமர் மோடி பிறந்த நாள் விழா

திருவள்ளூர் ஜெயா நகர் பகுதியில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் பிரதமரின் 72-வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.;

Update: 2022-09-18 11:17 GMT

இந்த நிகழ்ச்சிக்கு பாரதீய ஜனதா கட்சியின் மத்திய அரசு நலத்திட்ட பிரிவு திருவள்ளூர் மாவட்ட துணை தலைவர் வக்கீல் கோ.சீ்த்தாராமன் தலைமை தாங்கி கட்சி கொடியை ஏற்றி வைத்தார். பின்னர், அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். அப்போது அவருடன் திருவள்ளூர் நகர தலைவர் சதீஷ்குமார், நகரத் துணைத் தலைவர் ஆர்.ஆர்.சேகர், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் மணிகண்டன், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மண்டல தலைவர் வேல்முருகன், ஓ.பி.சி. பிரிவு மாநில செயற்குழு உறுப்பினர் மகேஷ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சித்ராதேவி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் திருவள்ளூர் மாவட்ட துணை தலைவர் வக்கீல் கோ.சீத்தாராமன் கட்சி கொடி ஏற்றி வைத்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழாவை வெகு சிறப்பாக கொண்டாடினார்.

Tags:    

மேலும் செய்திகள்