பிரதமர் மோடி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

கூடலூரில் பிரதமர் மோடி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.;

Update: 2022-09-17 18:45 GMT

கூடலூர், 

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் காந்தி சிலை முன்பு பா.ஜ.க.வினர் இனிப்பு மற்றும் உணவு பொட்டலங்களை வழங்கி கொண்டாடினர். இதற்கு நகர தலைவர் ரவி தலைமை தாங்கினார். மகளிர் அணி நிர்வாகி நளினி மற்றும் பாரதி சந்திரன், முருகன், முத்து உள்பட பா.ஜ.க.வினர் பலர் கலந்துகொண்டனர். இதேபோல் கூடலூர் அருகே ஸ்ரீமதுரை ஊராட்சி அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் சுனில் தூய்மை பணியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் பொதுமக்கள் கலந்துகொண்டனர். இதேபோல் பல இடங்களில் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்