தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.;

Update: 2023-06-08 05:28 GMT

சென்னை,

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து ரூ.762.30 கோடி மதிப்பீட்டில், 22 அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

ரோபோட்டிக்ஸ், இன்டஸ்ட்ரியல் ஆட்டோ மேஷன், மேனுபேக்சரிங் போன்ற நவீன திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது. அட்வான்ஸ் மேனு பேக்சரிங், மின்சார வாகனங்களுக்கான மெக்கானிக் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இன்டஸ்ட்ரியல் பெயிண்டிங், அட்வான்ஸ் வெல்டிங் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்