தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2022-09-20 19:08 GMT


20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய கல்வி கொள்கை

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். புதிய கல்வி கொள்கையை கைவிட வேண்டும். தேசிய கல்வி கொள்கையின்படி நியமிக்கப்பட்ட ஒப்பந்த ஆசிரியர்களை முறைப்படுத்தி நிரந்தரம் செய்ய வேண்டும். ஊதியக்குழு அறிக்கைகளை நாடு முழுவதும் ஒரே மாதிரியாக நிறைவேற்றுவதற்கான நிதியினை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும்.

எமிஸ் வலைதள பதிவேற்றும் பணிகளில் இருந்து ஆசிரியர்களை முற்றிலுமாக விடுவிக்க வேண்டும்.ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும். உயர்கல்வி படித்தவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்க ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும்.

ஆர்ப்பாட்டம்

உயர்கல்வி படித்து பின்னேற்பு அனுமதிக்காக காத்திருக்கும் 6,500 ஆசிரியர்களுக்கும் பின்னேற்பு வழங்க வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று திருவாரூர் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் கணேசன், மாவட்ட செயலாளர் ஈவேரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாவட்ட பொருளாளர் சுபாஷ், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, அய்யப்பன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெயசீலன், அமிர்தராஜ், ஜெயந்தி, மகளிர் வலையமைப்பு அமைப்பாளர் கல்யாணி, அமைப்பு செயலாளர் கிருபாராணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட துணை செயலாளர் சிவக்குமார் வரவேற்றார். முடிவில் மாவட்ட துணை செயலாளர் வடுகநாதன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்