கோவில்பட்டி: கோவிலுக்கு வந்த குழந்தையிடம் நகை திருடிய பூசாரி கைது

கோவில்பட்டி அருகே கோவிலுக்கு காது குத்த வந்த குழந்தையிடம் நகை திருடிய பூசாரியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-28 13:47 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டியை அடுத்துள்ள உருளைகுடி, தெற்கு தெருவைச் சேர்ந்தவர் அய்யாத்துரை மனைவி முனீஸ்வரி (வயது 28). இவர் கோவில்பட்டி அருகே ஆலம்பட்டி வினை தீர்க்கும் அய்யனார் கோயிலில் தனது குழந்தைக்கு மொட்டை போட்டு, காது குத்துவதற்காக, கடந்த 12-ம் தேதி சென்றுள்ளார். அப்போது, குழந்தையின் கழுத்தில் அணிந்திருந்த மூன்றே கால் பவுன் தங்கநகை திருடு போயிருந்ததாம்.

இதுகுறித்து, முனியசாமி நேற்று (திங்கள்கிழமை) கோவில்பட்டி மேற்கு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிந்தனர். சப்- இன்ஸ்பெக்டர் ஹரிகண்ணன் கோயில் பூசாரியான குருசாமி மகன் சுப்பிரமணியனிடம் (வயது 61) விசாரணை நடத்தினார்.

விசாரணையில், பூசாரி சுப்பிரமணியன் குழந்தையின் கழுத்தில் அணிந்திருந்த நகையை திருடியது தெரியவந்தது. அவரிடமிருந்து 3.25 பவுன் தங்க நகையை கைப்பற்றி, அவரை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்