வரத்து அதிகரிப்பால் பூக்களின் விலை வீழ்ச்சி
வரத்து அதிகரிப்பால் பூக்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
வேட்டமங்கலம், குந்தாணிபாளையம், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், நல்லிக்கோவில், பேச்சிப்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தங்களது நிலங்களில் குண்டு மல்லி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். பின்னர் விளைந்தவுடன் பறித்து உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பாக்கெட் போட்டு உள்ளூர் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். நேற்று குண்டு மல்லி ஒரு கிலோ ரூ.800-க்கும், முல்லைப் பூ ரூ. 800-க்கும், ஜாதி மல்லி ரூ.800-க்கும், சம்பங்கி ரூ.80-க்கும், அரளி ரூ.80-க்கும், ரோஜா ரூ.160-க்கும், செவ்வந்திப்பூ ரூ.180-க்கும் விற்பனையானது. வரத்து அதிகரிப்பால் பூக்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.