முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்திக்கிறார் ஜனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்கா..!

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை எதிர்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்கா நாளை நேரில் சந்தித்து ஆதரவு கோருகிறார்.;

Update: 2022-06-29 08:57 GMT

சென்னை,

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24-ம் தேதியுடன் முடிவடைய உள்ளதால், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18-ம் தேதி நடத்தப்பட உள்ளது.

இந்த ஜனாதிபதி தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பழங்குடியின பெண் தலைவர் திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்கா அறிவிக்கப்பட்டு வேட்புமனுவும் தாக்கல் செய்தார். யஷ்வந்த் சின்காவுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வந்தன.

இந்த நிலையில் யஷ்வந்த் சின்கா பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கோருவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் சூழலில் நாளை தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்திக்க உள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. நாளை மாலை 5 மணிக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை எதிர்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்கா நேரில் சந்தித்து ஆதரவு கோருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்