மின்சார விபத்துகளில் இருந்து தற்காத்து கொள்ளும் வழிமுறைகள்

Update: 2023-10-10 18:53 GMT

வடகிழக்கு பருவமழை காலத்தில் மின்சார விபத்துகளில் இருந்து பொதுமக்கள் தற்காத்து கொள்ளும் வழிமுறைகள் குறித்து மின்வாரியத்துறை அதகாரிகள் விழிப்புணர்வு செய்துள்ளனர்.

இது தொடர்பாக திருப்பத்தூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ராமலிங்கம் கூறியுள்ளதாவது:-

வழிமுறைகள்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால், மின்விபத்துகளிலிருந்து தற்காத்துக்கொள்ள வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

மின்கம்பம், அவற்றை தாங்கும் மின்கம்பிகளில் கால்நடைகள், விளம்பர பலகைகளை வைக்கக்கூடாது. மின்னல் ஏற்படும்போது வெட்டவெளி, மரங்கள், மின்கம்பங்கள், மின்கம்பிகள் அடியில் செல்லக்கூடாது.

மழை பெய்யும்போது கான்கீரிட் கட்டிடங்களில் தஞ்சம் அடையலாம். மின்கசிவுகளை கண்டறிய வீடு, கடை, கோவில், பள்ளிகளில் ஆர்.சி.சி.பி. பொருத்த வேண்டும்.

ஒவ்வொரு வீட்டிற்கும் சரியான `எர்த்' இணைப்பு போடுவதுடன் அதை குழந்தைகள், விலங்குகள் தொடாத வகையில் பராமரிக்க வேண்டும்.

மின்கம்பங்களில் ஏறக்கூடாது

உயரழுத்த, தாழ்வழுத்த மின்பாதை அருகில் நிறுத்தி டிப்பர் லாரி, கனரக வாகனங்களை வைக்கக்கூடாது. கேபிள் டி.வி. ஒயர்களை உயரழுத்த மின்கம்பிகளுக்கு அருகில் கொண்டு செல்லக்கூடாது. மின்மாற்றி, மின்கம்பங்களில் மின்வாரிய பணியாளர்களை தவிர யாரும் ஏறக்கூடாது. விவசாய நிலத்தில் மின்வேலி அமைக்கக்கூடாது. அறுந்து விழுந்த மின்சார கம்பிகளில் அருகில் பொதுமக்கள் செல்லக்கூடாது. மேலும் இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்திற்கு அல்லது மின்தடை புகார் மையத்திற்கு தகவல் தெரிவிக்கவும்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்