ஆத்துவாம்பாடியில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்

ஆத்துவாம்பாடியில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது.;

Update: 2022-09-30 18:45 GMT

கண்ணமங்கலம்

ஆத்துவாம்பாடியில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது.

சந்தவாசல் அருகே உள்ள ஆத்துவாம்பாடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாமை போளூர் ஒன்றிய குழு தலைவர் சாந்திபெருமாள் குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்து நலத் திட்டங்கள் குறித்து விரிவாக பேசினார். ஊராட்சி மன்ற தலைவர் கே.சிவகுமார் தலைமை தாங்கினார். கேளூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ஜி.ஜான்சி வரவேற்றார். களம்பூர் மருத்துவ அலுவலர் எஸ். சுந்தர் மருத்துவத் திட்டங்கள் குறித்து விளக்கவுரை ஆற்றினார். இந்த முகாமில் 1088 நபர்கள் வந்திருந்தனர்.

இதில் 57 நபர்களுக்கு ஸ்கேன் பரிசோதனை, 21 நபர்களுக்கு இ.சி.ஜி. பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கண் புரை நோயாளிகள் 7 பேரை அறுவை சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க களம்பூர் வட்டார கண் மருத்துவ உதவியாளர் முரளிதரன், பரிந்துரை செய்தார். மற்றவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டது.

முகாமில் ஓன்றிய குழு உறுப்பினர் எஸ். செல்வராஜ், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் டி.செல்வரசி தட்சிணாமூர்த்தி, மருத்துவம் சாரா மேற்பார்வையாளர், சமுதாய கிராம சுகாதார செவிலியர், பகுதி சுகாதார செவிலியர், சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பரசுராமன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்