ஈஸ்வரன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

வழிபாடு;

Update: 2023-04-17 22:18 GMT

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஈஸ்வரன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

கோபி

கோபி அருகே கூகலூரில் உள்ள அம்பிகை மீனாட்சி சமேத நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி நந்தீஸ்வரருக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து அம்பிகை மீனாட்சி சமேத நஞ்சுண்டேஸ்வரர், மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதையடுத்து சாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். பின்னர் ரிஷப வாகனத்தில் சாமி வீதி உலா கோவிலின் உள்பிரகாரத்தில் நடைபெற்றது.

ஊஞ்சலூர்

இதேபோல் ஊஞ்சலூர் நாகேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நாகேஸ்வரர், அம்மனுக்கு பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. இதையடுத்து நந்தி வாகனத்தில் நாகேஸ்வரர், அம்மன் ஆகியோர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

இதேபோல் கொளாநல்லி பாம்பலங்கார சாமி கோவிலில் உள்ள இரட்டை நந்திக்கும், கொந்தளம் நாகேஸ்வர சாமி கோவிலில் உள்ள நந்திக்கும், பழனிக்கவுண்டம்பாளையம் பழனியாண்டவர் கோவிலிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.

அம்மாபேட்டை

அம்மாபேட்டை காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள மீனாட்சி உடனமர் சொக்கநாதர் கோவிலில் உள்ள நந்தி பகவானுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், திருமஞ்சனம் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நந்திக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு பஞ்ச தீபம், கும்ப தீபம் உள்ளிட்ட பல்வேறு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன. பின்னர் பக்தர்கள் புடை சூழ கோவிலில் சாமி வீதி உலா நடைபெற்றது.  

Tags:    

மேலும் செய்திகள்