திட்டக்குடி வைத்தியநாதசாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு திரளான பக்தர்கள் தரிசனம்
திட்டக்குடி வைத்தியநாதசாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தாிசனம் செய்தனா்.
திட்டக்குடி,
திட்டக்குடி அருள்மிகு அசனாம்பிகை அம்மன் உடனுறை வைத்தியநாதசுவாமி கோவிலில் நேற்று சனி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி மாலை 4 மணி அளவில் நந்தி மற்றும் சுவாமி, அம்மனுக்கு மஞ்சள், பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட நறுமண பொருட்களால் அபிஷேகம், அலங்காரம் செய்து தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து சுவாமி, அம்மன் உள் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.