பட்டுக்கோட்டை பகுதியில் மின் வினியோகம் நிறுத்தம்

பட்டுக்கோட்டை பகுதியில் மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2023-04-24 19:19 GMT

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் பட்டுக்கோட்டை புறநகர் உதவி செயற்பொறியாளர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பட்டுக்கோட்டை அருகே உள்ள பள்ளத்தூர் துணை மின் நிலையம் மற்றும் நாடியம் துணை மின் நிலையம் பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 30-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பட்டுக்கோட்டை- சேதுபாவாசத்திரம் மாநில நெடுஞ்சாலையில் விரிவாக்க பணிகள் நடைபெற உள்ளது. இதனால் ஆண்டிக்காடு மற்றும் மல்லிப்பட்டினம் மின் பாதைகளில் இருந்து மின்சாரம் வினியோகம் செய்யப்படும் ஆண்டிக்காடு, அழகியநாயகிபுரம், மருதங்காவயல், கரிசவயல், அலமதிக்காடு, இரண்டாம்புலிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது மின்சார வினியோகம் இருக்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்