முறிந்து விழும் நிலையில் மின்கம்பம்

நாகூர்-ஆழியூர் சாலையில் முறிந்து விழும் நிலையில் மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-09-24 18:45 GMT

நாகூர்-ஆழியூர் சாலையில் முறிந்து விழும் நிலையில் மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகூர்-ஆழியூர் சாலை

நாகூர்-ஆழியூர் சாலை கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து திருவாரூருக்கு செல்லுவதற்கு முக்கிய சாலை உள்ளது. இந்த சாலை வழியாக மேலநாகூர், பாலக்காடு, வைரன் இருப்பு, பெருங்கடமன்னூர், ஆழியூர் ஆகிய ஊர்களுக்கு ஏராளமான பொதுமக்கள் சென்று வருகின்றனர். இந்த சாலையை அதிக அளவில் பள்ளி மாணவ, மாணவிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையோரம் மின்கம்பங்கள் உள்ளன.

முறிந்து விழும் நிலையில் மின்கம்பம்

தற்போது இந்த சாலையோரத்தில் உள்ள மின்கம்பம் ஒன்று சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. மேலும் மின்கம்பத்தின் அடிப்பகுதியில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்து முறிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மின்கம்பம் விழுந்து விபத்து ஏற்படுமோ? என அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறிந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு, அதே இடத்தில் புதிய மின்கம்பத்தை அமைத்து தரவேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்