இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தும் இடங்கள்

இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.;

Update: 2023-06-19 18:45 GMT

கீழக்கரை

கீழக்கரை துணைமின் நிலையத்தில் உள்ள திருஉத்தரகோசமங்கை பீடரில் இன்று(செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைெபறுகிறது. எனவே திருஉத்தரகோசமங்கை பீடர்க்கு உட்பட்ட பகுதிகளான பாளையரேந்தல், சின்னபாளையரேந்தல், பணயங்காள், அணைகுடி, மோர்குளம், குளபதம், களரி, வேளானூர், வெள்ளா, எக்ககுடி, நல்லாங்குடி ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

கடலாடி துணை மின் நிலையத்தில் நாளை(புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. எனவே சாயல்குடி, நரிப்பையூர், கன்னிராஜபுரம், மாரியூர் முந்தல், மலட்டாறு, செவல்பட்டி, எஸ்.தரைக்குடி, கடுகு சந்தை, மடத்தாகுளம், பெருநாழி, குருவாடி, பம்மனேந்தல் டி.எம்..கோட்டை, துத்திநத்தம், கடலாடி, ஏனாதி, கீழச்சிறுபோது, மேலச்சிறுபோது, பொதிகுளம், ஆப்பனூர், ஒருவானேந்தல், தேவர் குறிச்சி, புனவாசல், சவேரியார்பட்டினம், மீனங்குடி, குமாரகுறிச்சி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும். இந்த தகவலை முதுகுளத்தூர் உதவி செயற்பொறியாளர் மாலதி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்