கூத்தூர் துணை மின் நிலைய பகுதியில் நாளை மின் நிறுத்தம்

கூத்தூர் துணை மின் நிலைய பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2022-06-28 19:28 GMT

பெரம்பலூர் மாவட்டம் கூத்தூரில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை(வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதனால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் அரியலூர் மேற்குப்பகுதி, புஜங்கராயநல்லூர், பேரையூர், குளத்தூர், மேத்தால், கூடலூர், திம்மூர், மேலமாத்தூர், வெண்மணி, அல்லிநகரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் செல்லபாங்கி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்