கடம்பத்தூர், காக்களூரில் நாளை மின்தடை
துணைமின் நிலையத்தில் நாளை மாதாந்திர அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கடம்பத்தூர், காக்களூரில் நாளை மின்தடை ஏற்படும் என;
திருவள்ளுரை அடுத்த கடம்பத்தூர் துணை மின்நிலையத்தில் உள்ள மின்சாதனங்களில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கடம்பத்தூர், பிரயாங்குப்பம், புதுமாவிலங்கை, எம்.ஜி.ஆர்.நகர், ஸ்ரீதேவிகுப்பம், செஞ்சி பானம்பாக்கம், மணவூர், விடையூர், ஆட்டுப்பாக்கம், திருப்பாச்சூர், கைவண்டூர், பெரிய களக்காட்டூர், சின்ன களக்காட்டூர், சின்னம்மாபேட்டை, அகரம், வெண்மனம்புதுார் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் தடை செய்யப்பட்டிருக்கும் என்று திருமழிசை மின்சார வாரிய செயற்பொறியாளர் கணபதி தெரிவித்துள்ளார்.
திருவள்ளூரை அடுத்த காக்களூர் துணைமின் நிலையத்தில் உள்ள மின் சாதனங்களில் நாளை மாதாந்திர அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காக்களூர் சிட்கோ, ஆஞ்சநேயபுரம், நரசிங்கபுரம், திருவள்ளூர் நகரம், மோதிலால் தெரு, சி.வி.நாயுடு சாலை, வள்ளுவர்புரம், ஈக்காடு, செவ்வாப்பேட்டை, புல்லரம்பாக்கம், காக்களூர், பூண்டி, ஒதப்பை, மெய்யூர், குஞ்சலம், பென்னலூர் பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கும் மின்சார விநியோகம் தடை செய்யப்பட்டிருக்கும் என்று திருவள்ளூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.