நாளை மினவினியோகம் நிறுத்தம்

ராணிப்பேட்டை, ஆற்காடு, பூட்டுத்தாக்கு பகுதிகளில் நாளை மினவினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2023-05-16 18:55 GMT

வேலூர் மின்பகிர்மான வட்டம், ராணிப்பேட்டை கோட்டத்தை சேர்ந்த ராணிப்பேட்டை துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை, ராணிப்பேட்டை நகரம், முத்துக்கடை, ஆட்டோ நகர், வி.சி.மோட்டூர், ஜெயராம் நகர், பழைய ஆற்காடு சாலை, காந்தி நகர், மேல் புதுப்பேட்டை, பிஞ்சி, அல்லிக்குளம், சின்ன தகரகுப்பம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் மின் நிறுத்தம் செய்யப்ப்டுகிறது.

இதேபோல் ஆற்காடு, பூட்டுத்தாக்கு, கத்தியவாடி துணை மின்நிலையங்களில் அத்தியாவசிய மின்பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளது.

எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் ஆற்காடு நகரம், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, வேப்பூர், விஷாரம், நந்தியாலம், தாழனூர், ராமநாதபுரம், கூராம்பாடி, உப்புப்பேட்டை, கிருஷ்ணாவரம், லப்பப்பேட்டை, முப்பதுவெட்டி, தாஜ்புரா, தக்கான்குளம், களர், கத்தியவாடி, கீழ்குப்பம், ஆயிலம், அருங்குன்றம், ஆயிலம்புதூர், ராமாபுரம், பூட்டுத்தாக்கு, மேலகுப்பம், சி.எம்.சி.மருத்துவமனை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளது என செயற்பொறியாளர்கள் குமரேசன் (ராணிப்பேட்டை), விஜயகுமார் (ஆற்காடு) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்