நாளை மின்சாரம் நிறுத்தம்

சோழசிராமணி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.;

Update: 2023-02-05 18:51 GMT

பரமத்திவேலூர்

பரமத்தி வேலூர் தாலுகா, சோழசிராமணி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நாளை(செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சோழசிராமணி, சுள்ளிபாளையம், சத்திபாளையம், சின்னாம்பாளையம், ஜமீன்இளம்பள்ளி, சித்தம்பூண்டி, மாரப்பம்பாளையம், இ.நல்லாகவுண்டம்பாளையம், பி.ஜி.வலசு உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் ராணி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்