நாளை மின்சாரம் நிறுத்தம்
வெம்பக்கோட்டை, அருப்புக்கோட்டை பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.;
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை, அருப்புக்கோட்டை பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
வெம்பக்கோட்டை
வெம்பக்கோட்டை அருகே உள்ள செவல்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிக்காக நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அப்பையநாயக்கன்பட்டி, மேலாண்மறை நாடு, கொட்ட மடக்கிபட்டி, செவல்பட்டி, மூர்த்திநாயக்கன்பட்டி, குகன்பாறை, அன்னபூர்ணியாபுரம், அம்மையார்பட்டி, சக்கம்மாள்புரம், துலுக்கன்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.
அதேபோல கங்கர்கோட்டை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கீழச்செல்லையாபுரம், மேலப்புதூர், கண்மாய் சூரங்குடி, சாணான்குளம், புல்லக்கவுண்டன்பட்டி, பந்துவார்பட்டி, புதுசூரங்குடி, நாரணாபுரம், வெள்ளையாபுரம், மார்க்கநாதபுரம், முத்தாண்டியாபுரம், தூங்கா ரெட்டிபட்டி, கோவில் செல்லையாபுரம், ஏழாயிரம் பண்ணை, இ.எல்.ரெட்டியாபட்டி, ஊத்துப்பட்டி, சங்கரபாண்டியாபுரம், ஜெகவீரம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
தாயில்பட்டி
வெம்பக்கோட்டை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட தாயில்பட்டி, விஜயகரிசல்குளம், கோட்டைப்பட்டி, சல்வார் பட்டி, பேர்நாயக்கன்பட்டி, வெற்றிலையூரணி, சுப்பிரமணியபுரம், மடத்துப்பட்டி, கணஞ்சாம்பட்டி வனமூர்த்திலிங்கபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை சிவகாசி மின் செயற்பொறியாளர் பாவநாசம் கூறினார்.
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
ஆதலால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மேற்படி துணை மின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் அருப்புக்கோட்டை நகா், பாளையம்பட்டி, பெரியபுளியம்பட்டி, பந்தல்குடி, பரமேஸ்வரி பஞ்சாலை, வெம்பூா் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் கண்ணன் கூறினார்.
விருதுநகர்
விருதுநகர் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இ்ந்த துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான விருதுநகர் பழைய பஸ் நிலையம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள், மேல ரதவீதி, பாத்திமா நகர், முத்துராமலிங்க நகர், இந்திரா நகர், பாண்டியன் காலனி மற்றும் புறநகர் பகுதிகளான குல்லூர் சந்தை, பெரிய வள்ளி குளம், அல்லம்பட்டி, ஆர்.எஸ். நகர், சத்திர ரெட்டியபட்டி, என்.ஜி.ஓ. காலனி, வேலுச்சாமி நகர், லட்சுமி நகர், ஆமத்தூர், பாவாலி, பேராலி, பாண்டியன் நகரில் கே.கே.எஸ்.எஸ்.என். நகர், காந்தி நகரில் ஒரு பகுதி, முத்தால் நகரில் ஒரு பகுதி, சத்திய சாய் நகர், வடமலைகுறிச்சி, பேராலி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும். மேற்கண்ட தகவலை மின்வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி கூறினார்.