நாளை மின்தடை

சேத்தூர் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.;

Update: 2022-12-25 19:56 GMT

ராஜபாளையம்,

ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள சேத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. ஆதலால் சேத்தூர், தேவதானம், கோவிலூர், சொக்கநாதன்புத்தூர், சோலைசேரி, கிருஷ்ணாபுரம், சுந்தரராஜபுரம், புத்தூர், புனல்வேலி, மீனாட்சிபுரம், ஜமீன் கொல்லங்கொண்டான், தளவாய்புரம், முகவூர், நல்லமங்கலம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின் செயற்பொறியாளர் திருநாவுக்கரசு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்