நாளை மின்நிறுத்தம்

லாலாப்பேட்டையில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2022-11-03 18:28 GMT

ராணிப்பேட்டை, நவ.4-

ராணிப்பேட்டை கோட்டத்தை சேர்ந்த முகுந்தராயபுரம் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதனால் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை லாலாபேட்டை, தக்காம்பாளையம், தெங்கால், நெல்லிக்குப்பம், ஏகாம்பரநல்லூர், கத்தாரிகுப்பம், பிள்ளையார்குப்பம், பேஸ்-3, சிப்காட், அம்மூர், வேலம், கல்மேல்குப்பம், கிருஷ்ணாவரம் மற்றும் அதனைச் சார்ந்த சுற்றியுள்ள பகுதிகளிலும் மின்சாரம் நிறுத்தப்படும்.

மேற்கண்ட தகவலை ராணிப்பேட்டை செயற்பொறியாளர் குமரேசன் தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்