ராஜபாளையம்,
ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள நல்லமநாயக்கன்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. ஆதலால் சோழபுரம், தேசிகாபுரம், நல்லமநாயக்கன்பட்டி, கிழவிகுளம், சங்கரலிங்கபுரம், செந்தட்டியாபுரம், வாழவந்தாள்புரம், முதுகுடி, அயன் கொல்லங்கொண்டான், பட்டியூர், காமாட்சிபுரம், தெற்கு வெங்காநல்லூர், நக்கநேரி, இளந்திரை கொண்டான், ஜமீன் கொல்லங்கொண்டான், கோட்டை ஆகிய பகுதியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின் செயற்பொறியாளர் திருநாவுக்கரசு தெரிவித்தார்.