ஒரத்தநாடு
ஒரத்தநாடு, கரம்பயம், கும்பகோணம் பகுதிகளில் நாளை(சனிக்கிழமை) மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
ஒரத்தநாடு
ஒரத்தநாடு துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே இந்த துணை மின்நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் ஒரத்தநாடு நகர், புதூர், கண்ணந்தங்குடி, ஆழிவாய்க்கால், சேதுராயன் குடிக்காடு, தென்னமநாடு, பருத்திக்கோட்டை, பொய்யுண்டார்குடிக்காடு, கோவிலூர், ஆயங்குடி, பாச்சூர், தெக்கூர், வெட்டிக்காடு, கருக்காடிப்பட்டி, கக்கரை, எலந்தவெட்டி, பாளாம்புத்தூர், தெலுங்கன்குடிக்காடு, புலவன்காடு, வளர்த்தான் தெரு, பேய்கருப்பன் கோட்டை மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று ஒரத்தநாடு நகர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சுரேஷ் தெரிவித்தார்.
கும்பகோணம்
கும்பகோணம் அர்பன் மற்றும் ராஜன் தோட்டம் துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் கும்பகோணம் நகர் மற்றும் கொரநாட்டு கருப்பூர், செட்டி மண்டபம், மேலக்காவேரி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று கும்பகோணம் நகர் உதவி செயற்பொறியாளர் பிரகாஷ் தெரிவித்தார்.
கரம்பயம்
பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கரம்பயம் துணைமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கரம்பயம் துணைமின் நிலையத்திற்குட்பட்ட ஆலத்தூர், பாப்பாநாடு, கரம்பயம், கிளாமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு மின்வினியோகம் இருக்காது என்று பட்டுக்கோட்டை புறநகர் உதவி செயற்பொறியார் மனோகரன் தெரிவித்தார்.