மயிலாடுதுறை அருகே நாளை மின் நிறுத்தம்

மயிலாடுதுறை அருகே நாளை மின் நிறுத்தம்;

Update: 2023-09-05 18:45 GMT


மயிலாடுதுறை மின்வாரிய இயக்குதல் மற்றும் பராமரித்தல் செயற்பொறியாளர் (பொறுப்பு) ரேணுகா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் பகுதிகளான பெரம்பூர், கடக்கம், கிளியனூர், சேத்தூர், எடக்குடி, பாலூர் ஆகிய பகுதிகளுக்கும் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

இதேபோல் குத்தாலம் அருகே பாலையூர் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் தேரழுந்தூர் பீடருக்கு உட்பட்ட செம்பியன் கோமல், கந்தமங்கலம், கள்ளிக்காடு, நச்சினார்குடி, பெரட்டகுடி, கொழையூர், சித்தாம்பூர் ஆகிய பகுதிகளுக்கும் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்