மணல்மேடு:
சீர்காழி மின்வாரிய செயற்பொறியாளர் லதாமகேஸ்வரி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மணல்மேடு துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக மேற்கண்ட துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் மணல்மேடு, ராதாநல்லூர், கிழாய், கடலங்குடி, திருமங்கலம், காளி, இளந்தோப்பு, பட்டவர்த்தி, மண்ணிப்பள்ளம், சித்தமல்லி, வடவாஞ்சார், திருச்சிற்றம்பலம், திருவாளப்புத்தூர், வரதம்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கும் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது. மேலும் அன்றைய தினம் மின் நிறுத்தம் செய்வது மின் கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களை பொறுத்து கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.