தொட்டியம், திருவானைக்காவல் பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்

தொட்டியம், திருவானைக்காவல் பகுதிகளில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.;

Update: 2023-08-24 22:02 GMT

மின் நிறுத்தம்

தொட்டியம் துணை மின் நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான தொட்டியம், அரங்கூர், காமலாபுரம், பாலசமுத்திரம், தோளூா் பட்டி, எம்.புத்தூா், ஏலூா்பட்டி, எம்.களத்தூர், மேய்கல்நாயக்கன்பட்டி, தலமலைப்பட்டி, காட்டுப்புத்தூர், நத்தம், காடுவெட்டி, முருங்கை, ராமசமுத்திரம், உன்னியூா், கொளக்குடி, அம்மன்குடி, பூலாஞ்சேரி, அப்பணநல்லூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது. இந்த தகவலை முசிறி மின்வாரிய செயற்பொறியாளா் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

திருவானைக்காவல்

இதேபோல் ஸ்ரீரங்கம் கோட்டத்துக்குப்பட்ட திருவானைக்காவல் துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகளையொட்டி திருவானைக்காவல் சன்னதி வீதி, வடக்கு உள்வீதி, தெற்கு உள்வீதி, ஒத்தத்தெரு, சீனிவாசநகர், நரியன்தெரு, நெல்சன்சாலை, அம்பேத்கர்நகர், பஞ்சகரை சாலை, அருள்முருகன்கார்டன், ஏ.யு.டி.நகர், ராகவேந்திரா கார்டன், காந்திசாலை, டிரங்க்ரோடு, கும்பகோணம் சாலை, சிவராம்நகர், எம்.கே.பேட்டை, சென்னை பைபாஸ்சாலை, கல்லணை சாலை, கீழகொண்டையம்பேட்டை, நடுகொண்டையம்பேட்டை, ஜம்புகேஸ்வரர்நகர், அகிலாண்டேஸ்வரி நகர், வெங்கடேஸ்வராநகர், தாகூர்தெரு, திருவெண்ணைநல்லூர், பொன்னுரங்கபுரம், திருவளர்சோலை, பனையபுரம், உத்தமர்சீலி, கிளிக்கூடு, பிச்சாண்டார் கோவில் பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட சங்கர்நகர், காமராஜ்நகர், மாருதிநகர், எஸ்.எஸ்.நகர், எம்.ஆர்.நகர், நம்பர் 1 டோல்கேட், பிச்சாண்டார் கோவில், ராஜாநகர், ஆனந்தநகர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று ஸ்ரீரங்கம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்