தா.பேட்டை, எல்.அபிஷேகபுரம் பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்
தா.பேட்டை, எல்.அபிஷேகபுரம் பகுதிகளில் இன்று மின்நிறுத்தப்படுகிறது.
தா.பேட்டை துணை மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை தா.பேட்டை, பிள்ளாதுரை, மேட்டுப்பாளையம், எரகுடி, தேவானூர், ஆராய்ச்சி, வளையெடுப்பு, பைத்தம்பாறை, மகாதேவி, ஜம்புமடை, கரிகாலி, பச்சபெருமாள்பட்டி, நெட்டவேலம்பட்டி, காருகுடி, ஆங்கியம், அலகாபுரி, ஊரக்கரை, பெருகனூர், கலிங்கப்பட்டி, வாளசிராமணி, கஞ்சம்பட்டி, வெள்ளாளப்பட்டி, தேவானூர் புதூர், மாணிக்கபுரம், கோணப்பம்பட்டி, ஆண்டிப்பட்டி, முத்துராஜாபாளையம், லட்சுமணபுரம், பிள்ளாபாளையம், கண்ணனூர், பேரூர், உள்ளுர், மங்கலம், ஜம்புநாதபுரம், திருத்தலையூர், சு.கோம்பை, நு.பாதர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது. இந்த தகவலை முசிறி இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளர் மேரி மேக்டலின் பிரின்ஸி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். இதேபோல் லால்குடி அருகே எல். அபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று காலை 11.30 மணி முதல் மாலை 4 மணி வரை எல்.அபிஷேகபுரம் காமராஜ்நகர், திருமங்கலம்ரோடு, உமர் நகர், சிறுதையூர்அக்ரஹாரம், ராமசாமி நகர், சந்தைபேட்டை மெயின்ரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.