முசிறி பகுதியில் இன்று மின் நிறுத்தம்
முசிறி பகுதியில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
முசிறி துணை மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி முசிறி, சிங்கார சோலை, பார்வதிபுரம், புதிய பஸ் நிலையம், கைகாட்டி, சந்தப்பாளையம், ஹவுசிங் யூனிட், சிலோன் காலனி, அழகாப்பட்டி, திருச்சி ரோடு, துறையூர் ரோடு, வேளகாநத்தம், தண்டலை புத்தூர், வடுகப்பட்டி தொப்பளாம் பட்டி, காமாட்சி பட்டி, மேட்டுப்பட்டி, முத்தம்பட்டி, சிட்டிலரை, தும்பலம், மணமேடு, அழகரை, கருப்பனாம்பட்டி, சீனிவாசநல்லூர், கோடியம்பாளையம், திருஈங்கோய் மலை, அந்தர பட்டி, சிந்தம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளர் மேரி மேக்டலின் பிரின்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.