இன்று மின்சாரம் நிறுத்தம்
சின்னாளப்பட்டியில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
திண்டுக்கல்லை அடுத்த காந்திகிராமத்தில் உள்ள கீழக்கோட்டை துணை மின் நிலையத்தின் நேருஜி நகர் உயர் அழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் இ்ன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி சின்னாளப்பட்டி திரு.வி.க.நகர், சின்னாளப்பட்டி பிரிவு, கஸ்தூரிபா மருத்துவமனை மெயின் ரோடு பகுதி, கீழக்கோட்டை, முத்தமிழ் நகர், கருணாநிதி காலனி, ஆர்.சி.பள்ளி தெரு ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இத்தகவலை சின்னாளப்பட்டி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.