இன்று மின்சாரம் நிறுத்தம்

கீரனூர் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.;

Update: 2023-04-26 14:58 GMT

பழனி அருகே மேல்கரைப்பட்டி துணை மின்நிலையம் கீரனூர் பீடரில், இன்று (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி கீரனூர், மேல்கரைப்பட்டி, கொழுமம்கொண்டான், சரவணம்பட்டி, ஆண்டிநாயக்கன்வலசு, கல்துறை, நால்ரோடு, பணம்பட்டி, சந்தன்செட்டிவலசு, சங்கம்பாளையம், பேச்சிநாயக்கனூர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. மேற்கண்ட தகவலை, பழனி மின்வாரிய செயற்பொறியாளர் பிரகாஷ்பாபு தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்