ராஜபாளையம்,
ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் சிட்டி மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. ஆதலால் சங்கரன்கோவில் முக்கு, இந்திரா நகர், தெற்கு வைத்தியநாதபுரம், தோப்புப்பட்டி தெரு ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின் செயற்பொறியாளர் திருநாவுக்கரசு கூறினார்.