நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்
எரியோடு பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.;
வேடசந்தூர் அருகே எரியோடு பகுதியில் திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி மற்றும் பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றும் பணி நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை எரியோடு நகர், குண்டாம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை எரியோடு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பஞ்சநதம் தெரிவித்துள்ளார்.