நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்
சத்திரப்பட்டி பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
பழனியை அடுத்த சிந்தலவாடம்பட்டி துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி சத்திரப்பட்டி, கணக்கன்பட்டி, பச்சளநாயக்கன்பட்டி, கோம்பைபட்டி, எரமநாயக்கன்பட்டி, போடுவார்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, வீரலப்பட்டி, ராமபட்டினம்புதூர் ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. மேற்கண்ட தகவலை பழனி மின்வாரிய செயற்பொறியாளர் பிரகாஷ்பாபு தெரிவித்துள்ளார்.