6-ந் தேதி மின் நிறுத்தம்

தஞ்சையை சுற்றியுள்ள கிராமங்களில் 6-ந் தேதி மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.;

Update: 2023-10-03 20:31 GMT

தஞ்சாவூர்;

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தஞ்சை புறநகர் உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-ஈச்சங்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி வருகிற 6-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மருங்குளம், ஈச்சங்கோட்டை, நடுவூர், சூரியம்பட்டி, கொ.வல்லுண்டாம்பட்டு, கொல்லாங்கரை, வேங்கைராயன்குடிகாடு, கோவிலூர், வடக்கூர், பொய்யுண்டார்கோட்டை, பாச்சூர், செல்லம்பட்டி, துறையூர், சூரக்கோட்டை, வாண்டையார் இருப்பு, மடிகை, காட்டூர், மேலஉளூர், கீழஉளூர், பொன்னாப்பூர் கிழக்கு, பொன்னாப்பூர் மேற்கு, ஆழிவாய்க்கால், பஞ்சநதிக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின் வினியோகம் இருக்காது. மேலும் மின் தடை தொடர்பாக 9498794987 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும்.மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்