11-ந் தேதி மின்தடை

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் 11-ந் தேதி மின்தடை செய்யப்படுகிறது.;

Update: 2023-07-07 19:16 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர், 

ஸ்ரீவில்லிபுத்தூர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 11-ந் தேதி நடைபெற உள்ளது. ஆதலால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஸ்ரீவில்லிபுத்தூர் நகர், இந்திரா நகர், காதி போர்டு காலனி, அத்திகுளம், சித்தாளம் புத்தூர், மம்சாபுரம், செண்பகத்தோப்பு, குட்டை தட்டி, காந்தி நகர், படிக்காசு வைத்தான்பட்டி, வன்னியம்பட்டி, வீட்டு வசதி வாரியம், கரிசல் லட்சுமிபுரம், ராஜபாளையம் ரோடு ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின் கோட்ட பொறியாளர் சின்னத்துரை கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்