விருத்தாசலம், ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இன்று மின் நிறுத்தம்

விருத்தாசலம், ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இன்று மின் நிறுத்தம்

Update: 2023-07-24 18:45 GMT

ஸ்ரீமுஷ்ணம்

விருத்தாசலம் கோட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் சிறப்பு பராமரிப்பு பணிகள் இன்று(செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இதன் காரணமாக கண்டிங்குப்பம் துணை மின் நிலையத்துக்குட்பட்ட சக்திநகர், தொழிற்பேட்டை, காமராஜ்நகர், ஆலடிரோடு, பெரியகண்டியாங்குப்பம், அண்ணாநகர் ஆகிய பகுதிகளுக்கும், மேலப்பாளையூர் துணை மின் நிலையத்துக்குட்பட்ட மேலப்பாளையூர், ஏ.வல்லியம், சி.கீரனூர், மருங்கூர், க.தொழூர், காவனூர், தே.பவழங்குடி, கீழப்பாளையூர், கம்மாபுரம், கோபாலபுரம், சு.கீனனூர், கொடுமனூர் ஆகிய பகுதிகளுக்கும், ஊமங்கலம் துணை மின் நிலையத்துக்குட்பட்ட கங்கைகொண்டான், ஊ.அகரம், ஊ.கொளப்பாக்கம், கொல்லிருப்பு, இருப்புகுறிச்சி, ஊத்தாங்கால், ஊமங்கலம், சமுட்டிகுப்பம், அம்மேரி, அரசகுழி, காட்டு கூனங்குறிச்சி, பொன்னாலகரம், கொம்பாடிகுப்பம், அம்பேத்கர்நகர், வி.குமாரமங்கலம், கோபாலபுரம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் விருத்தாசலம் செயற்பொறியாளர் சுகன்யா தெரிவித்துள்ளார்.

இதேபோல் ஸ்ரீமுஷ்ணம் துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் ஸ்ரீமுஷ்ணம், ஸ்ரீஆதிவராகநல்லூர், நகரப்பாடி, ஸ்ரீநெடுஞ்சேரி, தேத்தாம்பட்டு, காவனூர், இணமங்கலம், நாச்சியார்பேட்டை, அக்ரஹாரம், குணமங்கலம், பூண்டி, ஸ்ரீபுத்தூர், எசனூர், கள்ளிப்பாடி, அம்புஜவல்லிபேட்டை, ராஜேந்திரப்பட்டினம், வேட்டக்குடி, டி.வி.புத்தூர், ஓலையூர், ஆத்துக்குறிச்சி விடுதுடையான், சின்னாத்துகுறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சிதம்பரம் செயற்பொறியாளர் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்