சொர்ணாவூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
சொர்ணாவூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.;
வளவனூர்,
கண்டமங்கலம் கோட்டம் சொர்ணாவூர் துணை மின் நிலையத்துக்குட்பட்ட உயரழுத்த மின் பாதையில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறஉள்ளது. இதனால் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை சொர்ணாவூர் மேல்பாதி, சொர்ணாவூர் கீழ்பாதி, கலிஞ்சிகுப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் சிவகுரு தெரிவித்தார்.