சோளிங்கரில் 4 மணி நேரம் மின் தடை

சோளிங்கரில் 4 மணி நேரம் மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

Update: 2022-07-07 18:20 GMT

சோளிங்கர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு பாணாவரம் கூட்டு சாலை பகுதியில் இருந்து மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை 6.15 மணிக்கு திடீரென மின் நிறுத்தம் செய்யப்பட்டது. இதனால் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட பஜார் வீதி, கிழக்கு பஜார், கிருஷ்ணசாமி முதலி தெரு நாரைக்குளம், போர்டின் பேட்டை, வெங்கட்ராமன் பிள்ளை தெரு, செங்குந்தர் பெரிய தெரு, தோப்புளம்மன் பகுதி, போஸ்ட் ஆபீஸ் தெரு, ராமசாமி தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களிலும் பில்லாஞ்சி, சோமசமுத்திரம், கல்பட்டு, ஈடிகைபேட்டை உள்ளிட்ட கிராமப்புற பகுதிகளில் மாலை 6.15் மணி முதல் இரவு 10.15 மணிவரை மின்வெட்டு நீடித்தது.

தொடர்ந்து 4 மணிநேரம் மின்வெட்டால் பொதுமக்கள் அவதியடைந்தனர். மின்வெட்டால் மாணவ-மாணவிகள் விளக்கு வெளிச்சத்திலும், மொபைல் வெளிச்சத்திலும் படிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்