மணல்மேடு பகுதியில் மின்நிறுத்தம்

மணல்மேடு பகுதியில் மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு.;

Update:2023-10-05 00:15 IST

மணல்மேடு:

மணல்மேடு துணை மின் நிலையத்தில் இருந்து மின்னோட்டம் பெறும் ரூரல் மற்றும் சர்க்கரை ஆலை உயர் அழத்த மின்பாதையில் இன்று (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக மேற்கண்ட மின்பாதைகளில் மின் வினியோகம் பெறும் திருவாளபுத்தூர், அழகன்தோப்பு, இளந்தோப்பு, பட்டவர்த்தி, தலைஞாயிறு, மண்ணிப்பள்ளம், திருக்குரக்காவல், பட்டவர்த்தி சர்க்கரை ஆலை ஆகிய பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது. மேலும் அன்றைய தினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களை பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டது. இந்த தகவலை மணல்மேடு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் இளையராஜா தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்