கூத்தூர் துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மறுநாள் மின் நிறுத்தம்
கூத்தூர் துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மறுநாள் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
கூத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை கூத்தூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் அரியலூர் மேற்கு பகுதி, புஜங்கராய நல்லூர், பேரையூர், ஜெமீன்ஆத்தூர், கூடலூர், குளத்தூர், ராமலிங்கபுரம், ரசுலாபுரம், உசேன்நகரம், அல்லிநகரம், மேலமாத்தூர், வெண்மணி, திம்மூர் மற்றும் மேத்தால் ஆகிய ஊர்களில் மின் வினியோகம் இருக்காது என்று மின்வாரியத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.