தம்மம்பட்டி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
தம்மம்பட்டி பகுதியில் நாளை மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.
தம்மம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தம்மம்பட்டி நகரம், ஜங்கசமுத்திரம், கொண்டையம்பள்ளி, மூலப்புதூர், கோனேரிப்பட்டி, செந்தாரப்பட்டி, நாகியம்பட்டி, உலிபுரம், நாரைக்கிணறு, கீரிப்பட்டி ஆகிய பகுதிளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை வாழப்பாடி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் முல்லை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.