பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் நாளை மின்தடை - மின்சார வாரியம் அறிவிப்பு

பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் நாளை மின்தடை செய்யப்படுவதாக மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.;

Update: 2022-09-19 16:20 GMT

சென்னை,

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பராமரிப்பு பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில்மின் வினியோகம் நிறுத்தப்படும்.

தாம்பரம்: பல்லாவரம், மல்லிகா நகர், பாரத் நகர், பொன்னியம்மன் கோவில் தெரு, சரோஜினி தெரு, ஐ.எ.எப். சுதானந்தபாரதி தெரு, லட்சுமி நகர், முருகேசன் தெரு, மெஸ் சாலை, ராஜ கீழ்பாக்கம், வ.உ.சி.தெரு, மாருதி நகர் 2-வது மெயின் ரோடு, ராமசுவாமி தெரு.

பெரம்பூர்: காந்தி நகர், முத்தமிழ் நகர் 8-வது பிளாக்.

பொன்னேரி: அரசூர், பெரியகாவனம், எலியம்பேடு, எ.ஆர்.புரம், பெரும்பேடு, டி.வி.புரம், கோடுர்.

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மீண்டும் மின் வினியோகம் கொடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்