பாடாலூர் பகுதியில் இன்று மின் நிறுத்தம்

பாடாலூர் பகுதியில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.;

Update: 2022-09-30 18:45 GMT

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சிறுவாச்சூர் உதவி செயற்பொறியாளர் ரவிகுமார் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- புதுக்குறிச்சி துணை மின்நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) அவசர பணிகள் நடைபெறவுள்ளது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் புதுக்குறிச்சி, காரை, சிறுகன்பூர், கொளக்காநத்தம், பாடாலூர், சாத்தனூர், சா.குடிக்காடு, அயினாபுரம், அணைப்பாடி, இரூர், தெற்கு மாதவி, ஆலத்தூர் கேட், வரகுபாடி, தெரணி பாளையம், திருவளக்குறிச்சி, அ.குடிக்காடு, நல்லூர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் காலை 11 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்