ஆனந்தூர் பகுதியில் நாளை மின்தடை
ஆனந்தூர் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படும் என மின்வாரியத்துறை உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.;
ஆர்.எஸ்.மங்கலம்,
ஆனந்தூர் துணை மின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணி நாளை(வெள்ளிக்கிழமை) நடைபெற இருப்பதால் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான கூடலூர், காவனக்கோட்டை, கொக்கூரனி, கோவிந்தமங்களம், சூரியன் கோட்டை, பனிக்கோட்டை, நத்தக்கோட்டை, புதுக்குறிச்சி, புத்தூர், ஓடக்கரை, தூவார், ஆயங்குடி, சிறுநாகுடி, பூவாணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் நிறுத்தம் செய்யப்படும் என திருவாடானை மின்வாரியத்துறை உதவி செயற்பொறியாளர் சித்தி விநாயகர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.