ஆனந்தூர் பகுதியில் நாளை மின்தடை
ஆனந்தூர் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.;
ஆர்.எஸ்.மங்கலம்,
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா ஆனந்தூர் துணை மின் நிலையத்தில் நாளை(வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே, நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஆனந்தூர், கூடலூர், காவனக்கோட்டை, கொக்கூரணி, கோவிந்தமங்கலம், சூரியன் கோட்டை, பனிக்கோட்டை, நத்தக்கோட்டை, புதூக்குறிச்சி, புத்தூர், ஓடக்கரை, தூவார், ஆய்ங்குடி, சிறுநாகுடி, பூவாணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. இந்த தகவலை திருவாடானை மின்வாரியத்துறை உதவி செயற்பொறியாளர் சித்தி விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.